இந்த மனசுதான் சச்சினை கிரிக்கெட் கடவுள் என போற்றவைக்கிறது.! கொரோனா நோயாளிகளுக்காக சச்சின் அள்ளிக்கொடுத்த தொகை.!
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன்
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழக்கும் சம்பவமும் நடந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தலைநகர் டெல்லியில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் சிரமமும் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்காக உதவி கரம் நீட்டியுள்ளார். கொரோனாவால் பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில், ஆக்சிஜன் வாங்கி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.37 லட்சம் (50 ஆயிரம் டாலர்) நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து முன்னாள் ஆஸ்திரேலியாவின் வேக பந்து வீச்சாளர் பிரட் லீ ரூ.41 லட்சம் இந்தியாவிற்கு நிதியுதவி அளித்தார்.
இந்தநிலையில், இந்தியாவின் "மிஷன் ஆக்ஸிஜன்" என்ற நிதிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் ஜாம்போவான் சச்சின் டெண்டுல்கர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். சச்சின் வெளியிட்ட அறிக்கையில், தனது உதவித் தொகை குறித்த விவரத்தை வெளியிடவில்லை. ஆனால், அவரது ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த 'மிஷன் ஆக்சிஜன் இந்தியா' சச்சினுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர் ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளாதாக வெளியிட்டுள்ளனர்.