'God is Back..' மீண்டும் களமிறங்கும் சச்சினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
Sachin fans welcome him as God is back
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று துவங்கவுள்ள RSW தொடரில் சச்சின் விளையாடவுள்ளதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் '#Godisback' என்ற ஹாஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.
24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்த சச்சின் கிரிக்கெட் உலகின் கடவுள் என்றே பல ரசிகர்களால் அழைக்கப்படுவார். 2013 ஐபிஎல் தொடருக்கு பிறகு சச்சின் தற்போது RSW எனப்படும் உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான தொடரில் விளையாடவுள்ளார்.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளை சேர்ந்த ஓய்வுபெற்ற வீரர்கள் இந்த தொடரில் கலந்துகொள்கின்றனர். சச்சினுடன் சேர்த்து சேவாக், யுவராஜ், லாரா, பிரட்லீ, சந்தர்பால், ஜான்டி ரோட்ஸ், தில்ஷான், முரளிதரன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் இந்த தொடரில் விளையாடவுள்ளனர்.
இந்த தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜென்ட்ஸ் மற்றும் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜென்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன. 11 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.