அந்த போட்டியில் ரன் அவுட் ஆகி பெவிலியன் வரை அழுதுகொண்டே வந்தேன்.! ஓப்பனாக பேசிய சச்சின்.! வைரல் வீடியோ
அந்த போட்டியில் ரன் அவுட் ஆகி பெவிலியன் வரை அழுதுகொண்டே வந்தேன்.! ஓப்பனாக பேசிய சச்சின்.! வைரல் வீடியோ
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் இந்திய கிரிக்கெட்டுக்கு தனது 25 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் பல இனிமையான நினைவுகளை அளித்துள்ளார்.
இந்த நிலையில் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் தான் விளையாடிய அனுபவம் குறித்து சச்சின் பேசியுள்ளார். அவர் வெளியிட்ட அந்த விடீயோவிற்கு "புனேவில் ஏக்கம் நிறைந்த தருணம் " என தலைப்பிட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் பேசுகையில், மும்பையின் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் தான் முதன் முதலாக ஆடிய போது, நண்பர் ராகுல் ஒரு ஆப் டிரைவ் அடித்து மூன்றாவது ரன் எடுக்கலாம் என கூறினார். அப்போது நான் வேகமாக ஓடக்கூடியவன் அல்ல. நான் 4 ரன்கள் எடுத்த நிலையில் போட்டியில் ரன் அவுட் ஆனேன். அந்த ரன் அவுட் என் நினைவில் இன்னும் உள்ளது.
அவுட் ஆன பிறகு பெவிலியன் வரை அழுதது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது எனது முதல் போட்டி, நான் பெரிய ரன்களை எடுக்க விரும்பினேன், ஆனால் அது நடக்கவில்லை என கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.