நான் அணியில் இருந்திருந்தால் தோனியை அப்போது தான் இறக்கியிருப்பேன் - சச்சின் அதிரடி பேச்சு
Sachin tells aboit dhoni position in semifinal
இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி அரையிறுதியில் தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
8 லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 7 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. ஆனால் அரையிறுதிக்குள் கடைசி நேரத்தில் உள்ளே வந்த நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணியினர் மீது ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
குறிப்பாக அரையிறுதியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இறக்கப்பட்ட வரிசை பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் தோனி ஏழாவது வீரராக களம் இறக்கப்பட்டது தான் அணியின் தோல்விக்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது பங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், " நான் அணியில் இருந்திருந்தால் நிச்சயம் தோனியை அவரது வழக்கமான 5 ஆவது இடத்தில்தான் இறக்கி இருப்பேன். அணி அப்போது இருந்த சூழ்நிலை மற்றும் அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு இல்ல ஒரு இன்னிங்சை கட்டமைக்க அவரையே இறக்கி இருக்கலாம். ஹர்டிக் பாண்டியா ஆறாவது இடத்திலும் தினேஷ் கார்த்திக் ஏழாவது இடத்திலும் இறக்கப்பட்டிருக்க வேண்டும்" என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்த சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் பிசிசிஐ மீண்டும் ரவி சாஸ்திரியையே பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்து வருகிறது போல் தெரிகிறது.