மீண்டும் களமிறங்கும் சச்சின்..! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்..! என்ன காரணம் தெரியுமா..?
Sachin Tendulkar to bat will face an over of Ellyse Perry
இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய வீராங்கனையின் சவாலை ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு ஓவரில் விளையாட உள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, மெல்போர்னில் நாளை காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார்.
இந்தப் போட்டிக்கு நடுவே, தனது பந்து வீச்சில், சச்சின் ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என்று ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
எல்லிஸின் சவாலை உடனே ஏற்றுக்கொண்ட சச்சின் தான் ஒரு ஓவர் விளையாட தயார் என கூறியுள்ளார். மேலும் இந்த முயற்சியால் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் சச்சின் கூறியுள்ளார்.
நாளை நடைபெறும் இந்த போட்டியின் இடைவேளையின்போது, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை எல்லிஸ் பெர்ரி வீசும் ஒரு ஓவரை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்வார் எனவும் அப்போது ஆஸ்திரேலிய வீராங்கனைகள் 10 பேர் களத்தில் பீல்டிங்கில் செய்வார்கள் எனவும் தெரிகிறது.