என் வாழ்க்கையையே மாற்றியவர்கள் இந்த 5 பெண்கள்தான்..! சச்சின் வெளியிட்ட வீடியோ.!
Sachin wishes on womens day

இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது வாழ்வில் முக்கியமான 5 பெண்களை பற்றி புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் குறிப்பிடும் அந்த 5 பெண்கள், அவரது தாய், அத்தை, மனைவி அஞ்சலி, அஞ்சலியின் அம்மா(மாமியார்) மற்றும் மகள் சாரா. இவர்கள் 5 பேரும் இல்லையென்றால் என் வாழ்க்கை எப்படி மாறியிருக்குமோ என முடித்துள்ளார்.
இவர்களை பற்றி கூறுகையில், "சிறு வயது முதலே என் உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு என்னை வளர்த்தவர் என் அம்மா; அடுத்ததாக 4 ஆண்டுகள் நான் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்ட போது என் அத்தையின் வீட்டில் தான் தங்கினேன். அவர்கள் எனக்கு இன்னொரு தாயாக இருந்து என்னை கவனித்தார்.
பின்னர் என் மனைவி அஞ்சலி, நான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன், நிங்கள் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுங்கள் என என் சுமையில் பாதியை ஏற்றுக்கொண்டார். மேலும் அவளின் அம்மா, அப்பா இருவரும் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தனர். என் மகள் சாரா அனைத்தையும் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த பெண்மனியாக வளர்கிறாள்" என்று கூறியுள்ளார்.