எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.. தோனிக்கு முன் களமிறங்கியது குறித்து குர்ரான் நெகிழ்ச்சி!
Sam curran about heading ahead of dhoni on first match
நேற்று துவங்கிய ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
சென்னை அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் இங்கிலாந்தை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான சாம் குர்ரான். க ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.
பேட்டிங்கில் ஜடேஜா விக்கெட்டை இழந்ததும் தோனி அல்லது கேதர் ஜாதவ் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடது கை பேட்ஸ்மேன் சாம் குர்ரானை களமிறக்கினார் தோனி. இதற்கு காரணம் அந்த சூழ்நிலையில் இடது கை பேட்ஸ்மேன் இருந்தால் சரியாக இருக்கும் என தோனி கணித்தது தான்.
அதற்கு ஏற்றாற்போல் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னை அணியை எளிதில் வெற்றிபெற செய்தார் குர்ரான். இதுகுறித்து பேசிய அவர், "தோனிக்கு முன்னர் நான் இறங்கியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வந்தவரை லாபம் என்ற எண்ணத்தில் தான் அடித்து ஆடினேன். நினைத்தது போன்றே பலன் கிடைத்தது" என கூறியுள்ளார்.