கால்பந்து போட்டியில் வரலாற்று வெற்றி..! ஒட்டுமொத்த மக்களுக்கும் குஷியான செய்தியை அறிவித்த சவுதி அரேபியா மன்னர்.!
கால்பந்து போட்டியில் வரலாற்று வெற்றி..! ஒட்டுமொத்த மக்களுக்கும் குஷியான செய்தியை அறிவித்த சவுதி அரேபியா மன்னர்.!
கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி அசத்தலான கோல் அடித்தார்.
இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் சலே அல்ஷெரி கோல் அடித்து அசத்த, ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் சலேம் அல்தாவசாரி கோல் அடித்து மிரட்டினார். இதனால் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.
வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவுதி அரேபியாவில் இந்த வெற்றியை சிறப்பிக்கும் விதமாக சவுதி அரசு இன்று அந்நாட்டில் பொது விடுமுறை அறிவித்துள்ளது. அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், அந்நாட்டின் தீம் பார்க்குகள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் நுழைவு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த வெற்றி சவுதி அரேபியாவில் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.