பிரபல இந்திய வீராங்கனைக்கும் பாலியல் தொல்லையா? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
sex tourcher - jwala gutta - india
இந்தியாவின் முன்னாள் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை ஜுவாலா காட்டாவும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்பொழுது பெண்களுக்கு நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக சினிமா துறையில் இருந்து பல முன்னணி நடிகைகள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் விளையாட்டு துறையில் பேட் மிண்டன் போட்டிகளில் இந்தியாவிற்கு பல பதக்கங்களை பெற்றுத்தந்த முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா காட்டாவும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி MeToo என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தனக்கு திறமையிருந்தும் தொடர்ந்து தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தேன். இந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மிகவும் கடினமான தனது ஓய்வு முடிவை அறிவித்தேன் என்று தனக்கு நேர்ந்த கொடுமைகளை பதிவிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டு அந்த நபர் தலைமைப்பதவி ஏற்றதிலிருந்து இந்திய அணியிலிருந்து அடிக்கடி தூக்கி எறியப்பட்டேன். பல போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன் ஆக இருந்தாலும் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. ரியோ ஒலிம்பிக்கில் இருந்து திரும்பி வந்த பிறகும் இதே நிலை நீடித்தது. 2016 வரை ஒவ்வொரு முறையும் நான் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.