இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய ஷரபோவா; அமெரிக்க ஓபன் டென்னிஸில் அசத்தல்
இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய ஷரபோவா; அமெரிக்க ஓபன் டென்னிஸில் அசத்தல்
நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸில் நட்ச்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா முதல் சுற்றில் நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், நட்ச்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா சுவிட்சலாந்தின் பேட்டி ஷ்ணனிடருடன் மோதிய ஷரபோவா 6-2 என முதல்செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
இரண்டாவது செட்டில் ஷ்ணைடர் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் டாய் பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. எனினும் பதற்றமின்றி விளையாடிய ஷரபோவா 6-2, 7-6,(8-6) என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி 51 நிமிடத்துக்கு நடந்தது.