×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரோஹித் சொன்ன சீக்ரெட்.. ஒரே ஓவரில் தலைகீழாய் மாறிய ஆட்டம்.. அப்படி என்ன சீக்ரெட் சொன்னார் ரோஹித்..?

நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா தன்னிடம் கூறிய சீக்ரெட் குறித்து ஷர்துல் தாகூர் பகிர்ந்துள

Advertisement

நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா தன்னிடம் கூறிய சீக்ரெட் குறித்து ஷர்துல் தாகூர் பகிர்ந்துள்ளார்.

நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 2 என சமன் செய்துள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் அடித்தது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மிகவும் இக்கட்டான நிலையில் 16-வது ஓவரின் முடிவில் காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி வெளியேற, கேப்டன்சி பொறுப்பை ரோஹித் ஷர்மா ஏற்றார்.

கேப்டனிசியை ஏற்ற உடன் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை பந்துவீச ரோஹித் ஷர்மா அழைத்தார். 17 வது ஓவரை ஷர்துல் தாகூர் வீச, முதல் பந்திலையே பென் ஸ்டோக்ஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் 46 ரன்கள் அடித்து வலுவான நிலையில் இருந்தபோது அவர் வெளியேறியது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கனவை தள்ளிப்போட்டது.

அதேபோல் தனது அடுத்த பந்திலையே இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கனும் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி கடுமையாக தடுமாறி இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் போட்டியின் திருப்புமுனையாக அமைந்த அந்த 17 வது ஓவர் குறித்து போட்டி முடிந்தபின் பேசிய ஷர்துல் தாகூர், தான் போட்டியை மிகவும் ரசித்து விளையாடியதாகவும், ஹர்திக் சில யோசனைகள் கூறியதாகவும் குறிப்பிட்டார். மேலும் அப்போது கேப்டன்சியை ஏற்ற ரோஹித் என்னிடம் வந்து, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் எனக் கூறினார். அதேபோல் இந்த மைதானத்தில் ஒரு பகுதி பெரிதாகவும், மற்றொரு பகுதி சிறிதாகவும் உள்ளது. இதனை மனதில் வைத்து பந்து வீசு என ரோஹித் எனக்கு அறிவுரை கூறினார் என ஷர்துல் தாகூர் கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ind vs eng #Rohith sharma
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story