ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி தோற்றத்துக்கும் ஜிஎஸ்டி-க்கும் என்ன சம்மந்தம்! சேவாக் எப்படி முடிச்சு போடுறாருனு பாருங்க
shewag links GST and DLS in INDvsAusT20
இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 17 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. எனவே இந்திய அணிக்கு டக்வொர்த் - லெவிஸ் - ஸ்டெர்ன் முறைப்படி இந்திய அணியின் இலக்கு 17 ஓவர்களில் 174 என மாற்றப்பட்டது.
இந்த இலக்கை துரத்திய இந்திய அணி இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.
இந்தியா ஆஸ்திரேலியாவை விட அதிகம் ஸ்கோர் எடுத்தும் தோல்வி அடைந்துவித்ததே என பலர் கவலையடைந்தனர். இருப்பினும் டக்வொர்த் - லெவிஸ் - ஸ்டெர்ன் முறையால் தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என சிலர் மனதை தேற்றிக்கொண்டனர்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சேவாக் ""இந்தியா ஆஸ்திரேலியாவை விட அதிகம் ஸ்கோர் எடுத்தும் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோருடன் ஜிஎஸ்டி சேர்த்து விட்டார்கள். ஆனால், போட்டி சுவாரஸ்யமாக ஆக இருந்தது" என கூறியுள்ளார் சேவாக்.
ஆஸ்திரேலியா 17 ஓவர்களில் எடுத்த 158 ரன்களோடு 15 ரன்களை டிஎல்எஸ் முறைப்படி சேர்த்துக் கொண்டதை தான் ஜிஎஸ்டி போட்டு விட்டார்கள் என கலாய்த்துள்ளார் சேவாக்.