20 வருட கிரிக்கெட் வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி! சிறப்பாக வழியனுப்பிய பாக்கிஸ்தான் வீரர்கள்
Shoib malik retired from cricket
1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் பாக்கிஸ்தான் அணியில் அறிமுகமான சோயிப் மாலிக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
37 வயதான சோயிப் மாலிக் 35 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1898 ரன்கள் எடுத்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியுள்ள மாலிக் 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். மாலிக் 2007 முதல் 2009 வரை பாக்கிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்தார்.
2010ல் ஒரு ஆண்டு தடையில் இருந்த சோயிப் மாலிக் மீண்டும் அணிக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டார். 287 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள மாலிக் 7534 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் டி20 போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
20 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய சோயிப் மாலிக் இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் இந்த உலகக்கோப்பையில் முதல் 3 போட்டிகளில் மட்டுமே ஆடினார். இந்தியாவுடன் ஆடியது தான் கடைசி போட்டி.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் ஆட்டத்தின் முடிவில் மைதானத்திற்குள் வந்த சோயிப் மாலிக்கிற்கு தகுந்த மரியாதையை செலுத்தி பாக்கிஸ்தான் வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.