ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்.! டெல்லி அணிக்கு அஸ்வின் கேப்டன்.?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, நேற்று முன்தினம் புனேவி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி, நேற்று முன்தினம் புனேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சிறப்பான பேட்டிங்காலும், சிறப்பான பந்துவீச்சாலும் இந்தியா அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியின்போது, ஷ்ரேயஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரின்தோள்பட்டை எலும்பு ஒருபக்கமாக விலகியிருப்பதாக தெரிவித்தனர். அவர் குணமடைய சில வாரங்களாகும் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான, மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆடமாட்டார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது.