இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் திடீர் விலகல்.!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் புணேவில் நட
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் புணேவில் நடைபெற்றது. அப்போட்டியில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஷ்ரேயஸ் ஐயர், பவுண்டரி நோக்கிச் சென்ற பந்தைத் தடுப்பதற்காக இடது கையை நீட்டி தாவினார். அப்போது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஓய்வறைக்கு சென்றார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஷ்ரேயஸ் ஐயரின் தோள்பட்டை எலும்பு ஒருபக்கமாக விலகியிருப்பதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஷ்ரேயஸ் ஐயர் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும் கிரிக்கெட் போட்டிகளில் ஷ்ரேயஸ் ஐயர் நல்ல பார்மில் இருந்தநிலையில், திடீரென ஆவர் போட்டியில் பங்கேற்காமல் விலகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.