கடைசி விக்கெட்டை போல்டாக்கி ஸ்டெம்ப்பை பிடுங்கி ஆக்ரோஷமாக ஓடிய சிராஜ்.! வெளியான வீடியோ.!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி விக்கெட்டை எடுத்த பின்பு சிராஜ்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி விக்கெட்டை எடுத்த பின்பு சிராஜ் ஸ்டம்பை பிடுங்கிக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 12 ஆம் தேதி துவங்கியது.
லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 152 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ், இங்கிலாந்து அணியின் கடைசி விக்கெட்டான ஜேம்ஸ் ஆண்டர்சனை போல்டாக்கினார்.
அதன் பின் உடனடியாக முதல் ஆளாக ஓடி வந்து ஸ்டெம்பை பிடுங்கி வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.