முதல் போட்டியிலேயே கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட தென்னாப்பிரிக்கா வீரர்! ரசிகர்கள் சோகம்
South africa bavuma out for 49 in first match
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
துவக்க ஆட்டக்காரராக இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் ஹென்ட்ரிக்ஸ் 6 ரன்னில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பவுமா கேப்டன் டிகாக்குடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். அவருக்கு இதுதான் முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.
சிறப்பாக ஆடிய டிகாக் அரைசதத்தை கடந்தார். 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த டிகாக் சைனி பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பவுமா முதல் போட்டியிலேயே அரைசதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆனால் தீபக் சாகர் வீசிய 18 ஆவது ஓவரின் முதல் பந்தில் 49 ரன்கள் எடுத்திருந்த பவுமா தூக்கி அடித்து விக்கெட்டை இழந்தார். இது தென்னாப்பிரிக்கா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றிபெற 150 ரன்கள் தேவை.