ஆரம்பத்தில் செய்யாததை கடைசியில் சிறப்பாக செய்த தென்ஆப்பிரிக்கா! ஆஸ்திரேலியாவிற்கு சரிவு
south africa beat australia in last match
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் 94 பந்துகளில் 100 ரன்களும் டசன் 97 பந்துகளில் 95 ரன்களும் விளாசினர். இந்த உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் சதம் அடிப்பது இதுவே முதல் முறை.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 20 ஓவர்களில் 3 முக்கியமான விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கவாஜா காயம் காரணமாக வெளியேறினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 122 ரன்கள் அடித்தார் அவருக்குப் பின்பு அதிரடியாக ஆட தொடங்கிய அலெக்ஸ் கேரி சிறப்பாக ஆடி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 315 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது.
இதன் முடிவில் ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி இந்த உலக கோப்பை தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆடியதுபோலவே தென்னாபிரிக்க அணி முந்தைய ஆட்டங்களில் ஆடியிருந்தால் அரையிறுதிக்குள் நுழைந்தது இருக்கும்.