தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சனத் ஜெயசூரியா மீது ஊழல் புகார்; ஐசிசியின் விசாரணையில் சிக்கியுள்ளதால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

srilanka cricket player sanath jayasuria

srilanka-cricket-player-sanath-jayasuria Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா ஊழல் செய்திருப்பதாக அவர்மேல் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு ஆணையத்தின் விசாரணையில் சிக்கியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டராக ஜொலித்தவர் சனத் ஜெயசூர்யா. குறிப்பாக அவர் பேட்டிங் செய்யும்போது அவரது ஆட்டத்தில் அனல் பறக்கும். இதனால் எந்த அணியின் பௌலர்களுக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

Tamil Spark

அந்த சமயத்தில் ஐசிசியால் கொண்டுவரப்பட்ட புதிய விதி முறையான பவர் பிளேயில் 
மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறிய காலகட்டத்தில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து தான் பவர் பிளேயில் எப்படி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசுவது என்று பெரும்பாலான பேட்ஸ்மென்கள் கற்றுக்கொண்டனர் என்று சொல்லலாம்.

அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சனத் ஜெயசூர்யா இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு சேர்மனாக பதவி ஏற்றார் (2013-15 ) மற்றும் 2017 ஆம் ஆண்டு வரை தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் வரை அப்பதவியில் நீடித்தார்.

அந்த காலகட்டங்களில் இலங்கை அணிக்கு வீரர்களை தேர்வு செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தது. இந்நிலையில் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் விசாரணை ஆணையத்திற்கு இதுவரை அவர் எந்த ஒத்துழைப்பையும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் அவர் பதில் அளிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil Spark #sanath jayasuria #srilanka cricket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story