ஆஸ்திரேலியாவுக்கு 42 பந்துகளில் 35 ரன்கள் தேவை.! பரபரப்பான ஆட்டம்.! தும்சம் செய்த இலங்கை அணி.!
ஆஸ்திரேலியாவுக்கு 42 பந்துகளில் 35 ரன்கள் தேவை.! பரபரப்பான ஆட்டம்.! தும்சம் செய்த இலங்கை அணி.!
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் இரு அணிகளும் இடையீயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 47.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 43 ஓவர்களில் 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக டேவிட் வர்னரும், பின்சும் களமிறங்கினர். பின்ச் 14 ரன்களில்ஆட்டமிழந்தார். இதனையடுத்து வார்னர் 37 ரன்களில்போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக 28 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழந்தார். ஒருகட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 42 பந்துகளில் 35 ரன்கள் தேவை இருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்தனர்.
ஆனால் இலங்கை பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 37.1 ஓவரில் 189 ரங்களுக்கு ஆல்அவுட் ஆகி இலங்கை அணி அபார வெற்றிபெற்றது. இலங்கை அணி தரப்பில் கருணரத்னே 3 விக்கெட்டுகளையும், சமீரா, டி சில்வா மற்றும் துனித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கருணாரத்னே 3 விக்கெட்டுகளுடன், 18 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.