மீண்டும் மழை! ஆனால் இந்த முறை விக்கெட் மழை; துவங்கியது இந்தியாவின் அசத்தல் பந்துவீச்சு
started wicket rain of pakistan
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை விளாசியது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 140 ரன்கள் விளாசினார். கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தனர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய போது புவனேஷ்குமார் காலில் காயம் ஏற்படவே பாதியில் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச வந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த பக்கர் ஜமான் மற்றும் பாபர் அசாம் சிறப்பான டேட்டிங்கை செய்து வந்தனர். சிறப்பாக ஆடி வந்த துவக்க ஆட்டக்காரர் பக்கர் ஜமான் அரைசதம் அடித்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் சேர்த்தனர். 2 ஆவது விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணி நீண்டநேரம் போராடி யது.
அந்த நீண்ட நேர போராட்டத்திற்கு 24 ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார். 48 ரன்கள் எடுத்திருந்த பாபர் அசாம் குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின.
அதனை தொடர்ந்து குல்தீப் யாதவ் வீசிய 26 ஆவது ஓவரில் சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்த பக்கர் ஜமான் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹர்டிக் பாண்டியா வீசிய 27 ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்நிலையில் 31 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது.