தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மைதானத்திற்குள் திடீரென நிர்வாணமாக ஓடிய ரசிகர்! நேற்றைய போட்டியில் நடந்த சலசலப்பு

Steaker ran to the ground

Steaker ran to the ground Advertisement

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியின் நடுவில் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று நடைபெற்ற போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்குள் நுழையும் என ஏற்கனவே தெரிந்த விஷயம். 

சொந்த மண்ணில் மானத்தை காப்பாற்ற போராடிய இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. ஆனால் ஆட்டத்தின் நடுவில் ஒருவர் தனது மானத்தையும் மறந்து நிர்வாணமாக மைதானத்திற்குள் நுழைந்துவிட்டார்.wc2019

இரண்டாவது இன்னிங்ஸின் 34 ஆவது ஓவரினை கிறிஸ் வோக்ஸ் வீசினார். 5 ஆவது பந்தில் லேதம் ஒரு பவுண்டரி விளாசினார். அந்த சமயத்தில் கிடைத்த கேப்பில் ரசிகர்  ஒருவர் எந்த ஆடையும் இன்றி மைதானத்தின் மையப்பகுதிக்கு ஓடிவந்துவிட்டார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

பின்னர் மைதானத்திற்குள் வந்த காவலர்கள் அந்த ரசிகரின் இடுப்பில் ஒரு துண்டினை கட்டி வெளியே அழைத்து சென்றனர். பொது இடங்களில் இவ்வாறு திடீரென நிர்வாணமாக ஓடுபவர்களுக்கு ஆங்கிலத்தில் ஸ்டீக்கர்ஸ் என்ற பெயர் உண்டு. இவர்கள் பொது வெளியில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு செய்பவர்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #Eng vs nz #Nz vs eng #Streaker at cricket ground
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story