இந்தியாவை அசிங்கப்படுத்தியதா தென்னாப்பிரிக்கா! கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெய்ன்
Steyn apologize kholi for not selected in sa team
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியலை தென்னாப்பிரிக்க வெளியிட்டுள்ளது.
இதுவரை டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வந்த டூப்ளஸிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டிகாக் கேப்டனாகவும் வான்டர் டஸன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடருக்கு டூப்ளஸிஸ் கேப்டனாக நீடிக்கிறார்.
மேலும் டி20 அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெய்ன், நிகிடி மற்றும் கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.
ஆனால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் ஸ்டெய்னிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் ஸ்டெய்ன் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார். மேலும் புதிய தேர்வு குழுவால் தான் நீக்கப்பட்டுவிட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு எதிராக உங்களது வேகம் தேவை இல்லை என கருதியும் எதிர்வரும் முக்கிய போட்டிகளுக்காக அணி நிர்வாகம் உங்களுக்கு ஓய்வு அளித்துள்ளது என ரசிகர்கள் பதிவிட துவங்கினர். இதனால் இந்திய அணியை தரம் தாழ்த்துவது போன்ற பிம்பம் சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கியது.
இந்நிலையில் இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலையை உருவாக்கியதற்காக விராட் கோலி மற்றும் இந்திய ரசிகர்களிடம் ஸ்டெய்ன் மன்னிப்பு கோரியுள்ளார்.