முதல் 6 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர்தானா! ஆச்சரியமூட்டும் உண்மை தகவல்
முதல் 6 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் இவர்தானா! ஆச்சரியமூட்டும் உண்மை தகவல்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை மிகவும் பிரபலமாக இருந்து வருவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள். ஒருநாள், டி20 என புதுவிதமான போட்டிகள் வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கென்று ரசிகர்கள் இன்னும் ஏராளமாக இருந்து வருகின்றனர்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தனது நாட்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசையாக இருக்கும். காரணம் தனிப்பட்ட வீரர்களின் திறமையை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே முழுமையாக காட்ட முடியும்.
அத்தகைய பிரபலமான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர் தான் விளையாடிய முதல் ஆறு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 912 ரன்கள் குவித்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன்(825), ஜார்ஜ் ஹாட்லி(730) ஆகியோர் உள்ளனர். தற்போது இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் பாகிஸ்தானின் இளம் வீரர் அப்துல்லா சாபிக்(720) இடம் பெற்றுள்ளார்.