கோப்பையை கைப்பற்றிய தமிழக கிரிக்கெட் அணி.! வெற்றி கொண்டாட்டத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்ட அசத்தல் டான்ஸ்.!
சையத் முஷ்டக் அலி கோப்பையை கைப்பற்றிய தமிழக அணியினர் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் உள்ளூர் தொடரான சையத் முஷ்டக் அலி ட்ராபியில் தமிழ்நாடு அணி சாம்பியன் ஆகி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த சையத் முஷ்டக் அலி ட்ராபி சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவர் முடிவில் 120 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி. 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
தமிழக வீரர்கள் இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் தங்களது ஓய்வறையில் விஜய் நடித்து அண்மையில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.