இன்று தொடருமா அரையிறுதி போட்டி? அதிரடியாக வெதர்மேன் வெளியிட்ட புதிய தகவல்!!
tamilnadu weatherman report about rain
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நேற்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் நடைபெறாது என ஐசிசி அறிவித்தது. இந்தநிலையில் இன்று (புதன் கிழமை) போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதாவது நேற்று எந்த ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அதே ஓவரில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடரும். இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றும் மழை பெய்து, அரையிறுதி போட்டி ரத்துசெய்யப்பட்டால், லீக் சுற்றில் முன்னிலையில் இருக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். இந்நிலையில் போட்டிக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய போட்டி குறித்தும், மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று மழை குறுக்கிட்டு மீதமிருக்கும் அரை இறுதிபோட்டி தடைபெற வாய்ப்பில்லை. 50 ஓவர்கள் போட்டி முழுவதும் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.