சர்வதேச அரங்கில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் யார் தெரியுமா? வீடியோவை பாருங்கள்
the first 6 sixes in international cricket
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்த வீரர் யார் என்றால் நாம் அனைவருக்கும் சட்டென்று ஞாபகத்துக்கு வருபவர் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ஸ்டுவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார்.
ஆனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் யுவ்ராஜ்க்கு முன்னதாகவே 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து சாதனை படைத்தவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் ஹெர்ஷல் கிப்ஸ். சர்வதேச அரங்கில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஆனால் உள்ளூர் போட்டிகளில் இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த கரபியில்ட் சொபேர்ஸ் மற்றும் இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
சர்வதேச அரங்கில் முதல் முறையாக இந்த சாதனையை நிகழ்த்திய ஹெர்ஷல் கிப்ஸ் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டான் வான் என்ற பந்துவீச்சாளர் வீசிய அந்த ஓவரில் தொடர்ந்து 6 சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த ஒரு மில்லியன் டாலரை கிப்ஸ் ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதற்காக நன்கொடையாக அளித்தார்.