அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா! பரபரப்பான சூழலில் இன்று பங்களாதேசுடன் பலப்பரீட்சை
Today india meet bangladesh in wc19

ஐசிசி உலக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40 ஆவது லீக் போட்டி இன்று பிரிமிங்காமில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணிக்கு இதுவரை 7 போட்டிகள் முடிந்துள்ளன. அதில் 5 வெற்றி 1 தோல்வி 1 டிரா என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணிக்கு இன்னும் 1 புள்ளி தேவை.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றாலே இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இரண்டு போட்டியிலும் வென்றால் முதல் இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா உடன் தோற்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் தான் அண்டை நாடான பங்களாதேசுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது இந்தியா. பங்களாதேசை பொறுத்தவரை இன்று இந்தியாவையும் அடுத்த போட்டியயில் பாகிஸ்தானையும் வென்றால் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.
எனவே இன்றைய போட்டியில் நிச்சயம் பங்களாதேஷ் அணி தனது முழு திறமையையும் கொண்டு இந்தியாவை எதிர்கொள்ளும். இந்த தாக்குதலை சமாளிக்குமா இந்தியா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.