முதல் பந்திலேயே அசத்திய விஜய் சங்கர்! தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு
vijay shankar proved in very first ball
உலக கோப்பை தொடரில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்பு வெறும் 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார் விஜய் சங்கர் இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்க பெரிய வெற்றிடம் காணப்பட்டது அதனை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கடைசி நேரத்தில் உலகக்கோப்பை அணியில் தேர்வாகினார் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் மூன்று வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதிலாக துவக்க ஆட்டக்காரராக கேஎல் ராகுலும் நான்காவது வீரராக களமிறங்க விஜய் சங்கரும் இன்றைய ஆட்டத்தில் இடம் பெற்றனர்.
பேட்டிங்கை பொருத்தவரை கடைசி நேரத்தில் விஜய் சங்கர்ருக்கு வாய்ப்பு கிடைத்தது. 15 பந்துகளை சந்தித்த அவர் 15 ரன்கள் எடுத்தார். ஆனால் பந்துவீச்சில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய் சங்கர். இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர்கள் ஆன பும்ரா மற்றும் புவனேஸ்வர்குமார் முதல் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு நீண்ட நேரம் போராடினர்.
ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய போது புவனேஷ்குமார் காலில் காயம் ஏற்படவே பாதியில் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச வந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார். உலகக் கோப்பை போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றிய விஜய் ஷங்கரை பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் முப்பத்தி ஐந்தாவது ஓவரை வீசிய விஜய் சங்கர் மீண்டும் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.