வீணானது விராட் கோலி, டிவில்லியர்சின் சாதனைகள்; ரசிகர்கள் ஏமாற்றம்.!
viraht kohli - ab divilers record no use - mumbai match
ஐபில் போட்டியின் 12 வது சீஸனின் ஏழாவது போட்டி நேற்று மும்பை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து மும்பை அணியின் துவக்க வீரர்களான டீகாக் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். ரோகித் சர்மா 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். டீகாக் 20 பந்துகளில் 23 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். யுவராஜ் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ரசிகர்களை உற்சாக படுத்தினார். இந்தநிலையில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பத்திலிருந்து நிதானமாக ஆடிவந்தது. விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய வாணவேடிக்கை நாயகன் ஏபிடி வில்லியர்ஸ் ஆதிரடியாக ஆடினார். இறுதி ஓவரை மலிங்கா வீசினார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது பெங்களூரு அணி. மலிங்காவின் சிறப்பான பந்துவீச்சால் பெங்களூரு அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70 ரன்களை குவித்து இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிராக கோலி 46 ரன்கள் எடுத்த போது ஐபிஎல்., அரங்கில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல்., அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சுரேஷ் ரெய்னா இந்த இலக்கை எட்டியிருந்தார்.
5000 ரனகள்: 157 இன்னிங்ஸ் (2019)- விராட் கோலி.
இதே போல பெங்களூரு மைதானத்தில் அதிகரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார்.
விராட் கோலி: 2120 ரன்கள் (69 போட்டிகள்)
டிவிலியர்ஸ்: 1692 ரன்கள் (54போட்டிகள்)
கிறிஸ் கெயில்: 1538 ரன்கள் (44 போட்டிகள்)
மந்தீப் சிங்: 409 ரன்கள் (21 போட்டிகள்)
காலிஸ்: 388 ரன்கள் (16 போட்டிகள்)
இதே போல பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ், 38 ரன்கள் எடுத்த போது, ஐபிஎல்., அரங்கில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் ஐபிஎல்.,அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய 17வது வீரர் என்ற பெருமை பெற்றார்.
தவிர, டேவிட் வார்னர் (4099 ரன்கள்), கிறிஸ் கெயில் (4093 ரன்கள்) ஆகியோரை தொடர்ந்து ஐபிஎல்., அரங்கில்., இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது வெளிநாட்டு வீரரானார் டிவிலியர்ஸ்.