ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட முன்னணி வீரர்கள்; வைரலாகும் வீடியோ.!
Virat and abd apologize for disappointing fans
2019 ஐபிஎல் தொடர் முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ப்ளே ஆஃபில் நுழையும் நான்காவது அணி எது என்று இன்று தெரிந்துவிடும்.
இந்நிலையில் நேற்று பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ஹைதராபத்தை வீழ்த்தியது. இதன்மூலம் 14 போட்டிகளில் பெங்களூரு அணி 5 போட்டிகளில் மட்டுமே வென்று ப்ளே ஆஃப் சுற்றை விட்டு வெளியேறியது.
இந்த தொடரில் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஆடிய முதல் 6 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை தழுவியது. இதனால் ஆரம்பம் முதலே பெங்களூரு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும், கடைசி போட்டி வரை ரசிகர்கள் பெங்களூரு அணிக்கு மிகுந்த ஆதரவு அளித்து வந்தனர். சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், மொயின் அலி, ஹெட்மயர், ஸ்டாய்னிஸ், சாகல், ஸ்டெயின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் இருந்தும் பெங்களூரு அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை.
தொடர் தோல்வியால் ரசிகர்களை ஏமாற்றியதற்காக வருத்தம் தெரிவித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இணைந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் இருவரும், தங்களுக்கு ஆதரவு தெரிவித்து பக்கபலமாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், ரசிகர்களின் எதிர்ப்பார்புகளை ஏமாற்றியதற்காக மன்னிப்பும் கோரியுள்ளனர். அடுத்து வரும் தொடர்களில் நிச்சயம் சிறப்பாக ஆடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம் எனவும் உறுதி அளித்துள்ளனர்.