சிங்கம் சூர்யாவை மிஞ்சும் விராட் கோலி! போலீஸ் உடையில் கம்பீரமாக லத்தியுடன் மிரட்டும் விராட்கோலியின் வைரல் வீடியோ!
virat in police dress
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் விராட் கோலிக்கு மட்டும் உலக நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணியில் இளம் வயதிலேயே அதிக சாதனைகளை படைத்த வீரர் என்றால் அது விராட் கோலி தான். அதேபோல் அதிக பெண்களுக்கு பிடித்த வீரர் என்றால் அதுவும் விராட் கோலி தான்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதவிருந்த முதலாவது டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்தநிலையில் அடுத்த போட்டி மொஹாலியில் நாளை காலை 6 மணிக்குநடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி விளம்பர படம் ஒன்றில் நடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்டின் டிவி விற்பனை குறித்த அந்த விளம்பரத்தில், விராட் கோலி போலீஸ் சீருடை அணிந்து சிங்கம் படம் சூர்யாவை மிஞ்சியுள்ளார்.
விராட் கோலி அந்த காட்சிகளில், குற்றவாளியை முறைத்து பார்ப்பது போல் மிரட்டலாக நடித்துள்ளார். அது விளம்பர வீடியோவாக இருந்தாலும் அவரின் கெத்தான ஆக்ஷனிற்காக ரசிகர்கள் இந்த வீடியோவினை பகிர்ந்து வருகின்றனர்.