ஆட்டம் முடிந்ததும் 87 வயது பாட்டியிடம் ஆசீர் பெற்றது ஏன்! விராட் கோலி விளக்கம்
Virat kholi tweeted about 87 year old fan
உலக கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின இந்த போட்டியில் 87 வயதான மூதாட்டி ஒருவர் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
நேற்றைய போட்டியின்போது மைதானத்தில் இருந்து கொண்டே அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் 87 வயதான பாட்டி சாருலதா படேல். ஆட்டத்தின் நடுவே வாயில் சிறுவர்களைப் போல ஒரு ஊதுகுழலை வைத்துக்கொண்டு இந்திய அணிக்காக ஆரவாரம் செய்தவர் தான் இந்த பாட்டி.
ஆட்டத்தின் நடுவிலேயே இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த பாட்டியின் ஆரவாரத்தில் மயங்கினர். எனவே ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா இருவரும் அந்த பாட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, " இந்தப் போட்டியில் அன்பையும் முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி; குறிப்பாக சாருலதா படேல் அவர்களுக்கு. 87 வயதான அவர்கள் நான் பார்த்ததிலேயே மிகவும் தேசப்பற்று மற்றும் துடிப்பு கொண்ட ரசிகர். வயது முக்கியமல்ல அவர்கள் கொண்ட அந்த பற்று தான் என்னை அவரை சந்தித்து ஆசிர் பெற தூண்டியது. அவருடைய அசீரால் அடுத்த போட்டியிலும் வெல்லுவோம்" என கோலி தெரிவித்துள்ளார்.