ஐ.சி.சி கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு! கோஹ்லிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?
Virat kohli again top on icc test cricket
சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் ஐ.சி.சி.,யின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி 149, 51 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளினார் கோலி.
ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில், கோலி சரியாக பேட்டிங் செய்யாததையடுத்து, தரவரிசையில் சறுக்கினார் கோலி. ஆனால், நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததையடுத்து, தரவரிசையில் அதிரடியாக உயர்ந்துள்ளார்.
தற்போது 937 புள்ளிகள் பெற்று விராட் கோலி, முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் 847 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 820 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட் 808 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 938 புள்ளிகள் பெற்ற கேரி சோபர்ஸ், வால்கார்ட, விவியன் ரிச்சார்ட்ஸ், சங்கக்கரா, ஆகியோரின் புள்ளிகளை எட்டுவதற்குக் கோலிக்கு இன்னும் ஒரு புள்ளி மட்டுமே தேவைப்படுகிறது.
4-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அரை சதம், 48 ரன்கள் அடித்த நிலையிலும், அவருக்கு எந்தவிதமான கூடுதல் புள்ளிகளும் கிடைக்கவில்லை. இதனால், கடந்த வாரத்தில் இருந்த அதே முதலிடத்திலும், புள்ளிகளிலும் கோலி தொடர்கிறார். இதுவரை 8 இன்னிங்ஸ்களிலும் விராட கோலி 544 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அதேசமயம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 3 இடங்கள் முன்னேறி டாப் 20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளார். இசாந்த் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 25-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா தனது 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் தொடர்ந்து தனது சிறப்பான பங்ஸளிப்பால், 487 புள்ளிகள் பெற்று 37-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
இங்கிலாந்து வீரர்களில் சாம் கரன், மொயின் அலி ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். சாம்கரன் 29 இடங்கள் முன்னேறி, 43-வது இடத்துக்கு வந்துள்ளார்.
மொயின் அலி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், 3 இடங்கள் நகர்ந்து 33-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 4-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 66 புள்ளிகள் பெற்று 543 புள்ளிகளுடன் 33-வது இடத்தை மொயின் அலி அடைந்தார்.
ஜோஸ் பட்லர் 15 இடங்கள் முன்னேறி 584 புள்ளிகளுடன் 32-வது இடத்தையும், பென் ஸ்டோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 29-வது இடத்தையும் பெற்றுள்ளார்.