உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதற்கு, விராட் கோலி கூறியது இது மட்டும் தான்!
virat kohli talk about final match
கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் இங்கிலாந்து அணி அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது.
இங்கிலாந்து அணியின் வெற்றியை ஒரு புறம் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், ஒரு புறம் இங்கிலாந்து அதிர்ஷ்டம் காரணமாகவே ஜெயித்தது, அதுமட்டுமின்றி நடுவர்களின் சில தவறுகளும் அந்த அணிக்கு சாதகமாக மாறிவிட்டது.
இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து பல வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இந்திய அணியின் தலைவரான விராட் கோலி மட்டும் எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது இது ஒரு அற்புதமான போட்டி, இங்கிலாந்து அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று மட்டுமே கூறியுள்ளார். நடுவர்களின் சர்ச்சை, பவுண்டரியை வைத்து இங்கிலாந்து வென்றது என்பதை பற்றி அவர் எதுவுமே தெரிவிக்கவில்லை.