ஓராண்டு தடைக்கு பிறகு பெற்ற ஆட்டநாயகன் விருதினை வார்னர் என்ன செய்துள்ளார் தெரியுமா!
Warner presented his mom award to fan
ஒரு ஆண்டு தடைக்கு பிறகு அணிக்குள் நுழைந்த டேவிட் வார்னர் வழக்கத்துக்கு மாறாக அதிரடி பாணியை கைவிட்டு பொறுமையாக விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தடுமாறி அரை சதம் எடுத்து அவுட் ஆன வார்னர் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்தார்.
ஆஸ்திரேலியாவின் அணித்தலைவர் ஃபின்ச் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் கடைசி ஆறு விக்கெட்டுகளை 30 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்.
308 ரன்கள் எனும் இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. பேட் கம்மின்ஸ் பந்தில் இமாம் உல் ஹக் அவுட்டாக அதன்பின்னர் விக்கெட் சரிவு ஏற்பட்டது. 45.4 ஓவர்களிலேயே பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
ஓராண்டு தடை முடிவடைந்து இந்த போட்டியில் சதமடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விருதினை வாங்கிய வார்னர் நேரடியாக மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை நோக்கி சென்றார். அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் தான் பெற்ற ஆட்டநாயகன் விருதினை வழங்கினார் வார்னர்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வார்னர் செய்த இந்த செயல் பலரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த சிறுவனும் மிகந்த மகிழ்ச்சியடைந்தான். வார்னர் இதேபோன்று பலமுறை செய்துள்ளாராம். ஆனால் தடைக்கு பிறகு முதல் சதமடித்து அதுவும் உலகக்கோப்பையில் பெற்ற ஆட்டநாயகன் விருதினை இப்படி பரிசாக கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.