டெஸ்ட் தொடரில் இந்திய அணியினரை திணறடிக்க புதிய வீரரை களமிறக்கும் வெஸ்ட் இண்டீஸ்!
West indies introduce rakheem cornwell
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத துவக்கத்தில் இருந்து மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 டி20 போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடர் ஆகும். எனவே இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்துள்ளது. இதில் ரஹீம் கார்ன்வால் என்ற அறிமுக வீரரை சேர்த்துள்ளனர். இவர் சுழற்பந்து மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார்.
26 வயதான கார்ன்வால் முதல் தர போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டராக ஆடியுள்ளார். 55 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 260 விக்கெட்டுகளையும், ஒரு சதம், 13 அரைசதம் விளாசியுள்ளார்.
இவர் பல இக்கட்டான சூழ்நிலைகளில் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து தனது அணிக்கு வெற்றியை தேடித் தரும் வல்லமை கொண்டவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மாயாஜால வீரரை முதல் முறையாக சர்வதேச அளவில் இந்திய அணிக்கு எதிராக களமிறக்கவுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.