மிரட்டல் அடி! வலுவான நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி; துரத்தி பிடிக்குமா இந்தியா!
west indies is in strong position at first odi
முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 323 ரன்களை என்ற இமாலய இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் ரிஷப் பண்ட் அறிமுகமாகியுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீசுவதாக அறிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மற்றும் பவல் மற்றும் ஹேம்ராஜ் களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கம் முதலே பவல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஹேம்ராஜ் 5-வது ஓவரில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அவருடன் ஜோடி சேர்ந்த ஹோப் நிதானமாக ஆடினார்.
39 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களை விளாசிய பவல் 51 ரன்கள் எடுத்த நிலையில் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 84 ஆகா இருந்தது. அவரை தொடர்ந்து வந்த சாமுவேல் ரன் ஏதும் எடுக்காமல் சாஹால் பந்துவீச்சில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மயர் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி வந்தார். அரைசதம் கடந்த அவர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். 78 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் விளாசி சதமடித்த ஹெட்மயர் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
39 வது ஓவரில் ஹெட்மயர் ஆட்டமிழக்கும் போது அணியின் எண்ணிக்கை 248 ஆக இருந்தது. பின்னர் வந்த கேப்டன் ஹோல்டர், பிஷூ, ரோச் ஆகியோர் கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 322 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. பிஷூ மற்றும் ரோச் கடைசிவரை ஆட்டமிழக்காமல் தலா 22 மற்றும் 26 ரன்களை எடுத்து இருந்தனர்.
அதிரடியாக ஆடி 78 பந்துகளில் சதம் அடித்து தனது அணி இந்த இமாலய ரன்னை எடுப்பதற்கு உதவியாக இருந்த இளம் வீரர் ஹெட்மயருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும் முகமது சமி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கலீல் அஹ்மத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்திய அணி இந்த இலக்கை எட்டிப் பிடிக்க முயற்சிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருப்பினும் ஆட்டம் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.