கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் புதிய உலக சாதனை; என்ன சாதனை தெரியுமா?
west indies new record - opening highest score - 365
தற்போது ஐபிஎல் சீசன் 12 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த சீசன் ஐபிஎல் தொடர் நிறைவடைய இன்னும் சில போட்டிகளே நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக உலகின் 10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை போட்டி தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தி வருகிறது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளுக்கு இடையே முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்க வீரர்களான சாய் ஹோப், ஜான் கேம்பல் இருவரும் சிறப்பான துவக்கம் அளித்தனர்.
தொடர்ந்து ஆடிய அவர்கள் அயர்லாந்து அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் விக்கெட்டை கைப்பற்ற அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் படாதபாடு பட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியா ஹோப், கேம்பெல் இருவரும் சதம் கடந்து மிரட்டினர்.
முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் சேர்த்த நிலையில் கேம்பெல் 179 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து ஹோப் 170 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற புது உலகசாதனை படைத்து அசத்தினர் விண்டீஸ் கேம்பெல், ஹோப். இப்போட்டியில் விண்டீஸ் அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு, ஆண்டிரு பால்பிர்னி (29), கெவின் ஓ பிரைன் (68), கேரி வில்சன் (30) ஆகியோர் தவிர, மற்ற யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. இதையடுத்து அயர்லாந்து அணி 34.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் விண்டீஸ் அணி 196 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸ் அணி வெற்றி பெற்றது.