இந்திய அணி 20 ஓவர்கள் கூட ஆடவில்லையெனில் என்ன நடக்கும்! ஐசிசி விளக்கம்
What happens if india wont bat 20 overs
ஐசிசி உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டார் ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முதல் இன்னிங்சின் 46.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு மழை அதிகமாக பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.
இந்திய நேரப்படி 8:40 மணியுடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும் நேரம் முடிந்தது. இனிமேல் ஆட்டம் ஆரம்பித்தால் இந்திய அணி தான் பேட்டிங் செய்ய வேண்டும். இந்திய நேரப்படி 9 மணிக்கு மேல் ஆட்டம் துவங்கப்படாத ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு ஓவர் குறைக்கப்படும்.
மழை முற்றிலும் நின்றால் இவ்வாறு கணக்கிடப்பட்டு இந்திய அணிக்கு ஓவர்கள் நிர்ணயிக்கப்படும். இந்திய அணிக்கு 40 ஓவர்கள் கொடுக்கப்பட்டால் இலக்கு 223, 35க்கு 209, 30க்கு 192, 25க்கு 172, 20க்கு 148 என ஓவர்களைப் பொறுத்து இலக்கு நிர்ணயிக்கப்படும்.
ஒருவேளை இந்திய அணிக்கு 20 ஓவர்கள் கூட ஆட வாய்ப்பு இல்லையெனில் ஆட்டம் ரிசர்வ் நாளான நாளை மீண்டும் நடைபெறும். நாளையும் இதே நிலை நீடித்தால் புள்ளிப் பட்டியல் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என ஐசிசி அறிவித்துள்ளது.