இந்திய அணியின் பயிற்சியாளர் இவர்தானா? இவர் நியமிக்கப்பட்டால் கோலியின் கேப்டன் பதவி பறிபோகுமா?
who will come as indian coach
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளது பிசிசிஐ. அந்த பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே விண்ணப்பிக்க உள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியின் பதவி உலகக் கோப்பையுடன் முடிந்தது. இந்நிலையில் மேலும் 45 நாட்கள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை என தெரிகிறது. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலத்த போட்டி இருக்கும்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலரும் விண்ணப்பம் செய்தாலும், அதில் முக்கிய பெயர்களாக டாம் மூடி, கேரி கிர்ஸ்டன், சேவாக் மற்றும் ஜெயவர்தனே ஆகியோரை குறிப்பிடுகிறார்கள். ஜெயவர்தனே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் நிச்சயம் கோலி டெஸ்ட் அணிக்கும், ரோஹித்தை ஒரு நாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவது உறுதி என்று கிரிக்கெட் வட்டாரங்கள் பிவெசிவருகின்றனர்.
இதுவரை விராட் கோலிக்கு ஏற்ற பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தது போல, ரோஹித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டால் அவருக்கு ஏற்ற ஜெயவர்தனே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மும்பை அணிக்கு கேப்டனாக இருக்கிறார் ரோகித் சர்மா மற்றும் அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கிறார் மஹேலா ஜெயவர்த்தனே.