தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

WC2019: இமாலய இலக்கை நிர்ணயித்த பாக்கிஸ்தான்! சாதனை வெற்றி படைக்குமா இங்கிலாந்து!

will england chase 348 and begin new record

will england chase 348 and begin new record Advertisement

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஆறாவது ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்துள்ள பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்துள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் ஏற்கனவே கடந்த மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது. ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாத பாகிஸ்தான் அணி இங்கிலாந்து பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இந்த போட்டி என்னை மிகவும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

wc2019

பாகிஸ்தான் ரசிகர்களின் ஆவலை நிறைவு செய்யும் வகையில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இமாம்  மற்றும் பக்கர் ஜமான் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆடிய பாகிஸ்தான் அணி 82 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு பக்கர் ஜமான் விக்கெட்டை இழக்க பாபர் அசாம் உள்ளே வந்தார். அதிரடியாக ஆடிய அவர் அரைசதத்தை கடந்தார்.

இமாம் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க அவரைத் தொடர்ந்து வந்த ஹபீஸ் அதிரடியாக ஆடி 84 ரன்கள் குவித்தார். கேப்டன் சர்ப்ராஸ் தனது பங்கிற்கு 55 ரன்களை எடுத்தார். இதனை தொடர்ந்து 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 348 ரன்கள் எடுத்தது எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த மாதம் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணியை இரண்டு முறை இரண்டாவதாக பேட்டிங் செய்து 340 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த இலக்கை நிச்சயம் எட்டிப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மென்களுக்கு இருக்கும்; ரசிகர்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.

அவ்வாறு இங்கிலாந்து அணி 349 ரன்களை எடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இதுவரை நடந்துள்ள உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்து அதிக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து அணி படைக்கும். இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக அயர்லாந்து அணி 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#wc2019 #eng vs pak #pak vs eng
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story