×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உலக கோப்பை டி-20 தொடர்: அரையிறுதி கனவு எட்டுமா பாகிஸ்தான்!.. தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்..!

உலக கோப்பை டி-20 தொடர்: பாகிஸ்தானின் அரையிறுதி கனவு எட்டுமா!.. தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்..!

Advertisement

எட்டாவது டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  டி-20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான்-தென்னாப்பிரிக்க அணிகள் இன்று சிட்னியில் நடைபெற உள்ள போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

உலக கோப்பை தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி பங்களாதேஷ், இந்திய அணிகளுடன் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என்று 5 புள்ளைகளுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றை உறுதி செய்துவிடும்.

பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 3 போட்டிகளில் இந்தியா, ஜிம்பாவே அணிகளுடன் தலா 1 தோல்வி, நெதர்லாந்து அணியுடன் வெற்றி என்று 2 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் நீடிக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அதன் பிறகு மற்ற அணிகள் விளையாட உள்ள போட்டிகளின் முடிவு பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமைய வேண்டும். அதாவது தென்னாப்பிரிக்க அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அணி, தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வே அணியியிடம் மோசமான தோல்வியை தழுவ வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று நடந்தால் அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.

சர்வதேச டி-20 போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 11 போட்டியில் பாகிஸ்தானும், 10 போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு சிட்னியில் தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வானிலையை பொறுத்தவரை சிட்னியில் இன்று மழை பெய்வதற்கு 11 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#T 20 World Cup #Team Pakistan #Team South Africa #group 2 #Sydney #PAK vs SA
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story