அவுட் இல்லாததற்கு அவசரப்பட்டு வெளியேறிய நியூசிலாந்து வீரர்.! கதறிய நியூசிலாந்து ரசிகர்கள்.! அஸ்வினுக்கு செம்ம குஷி.. வைரல் வீடியோ.!
அவுட் இல்லாததற்கு அவசரப்பட்டு வெளியேறிய நியூசிலாந்து வீரர்.! கதறிய நியூசிலாந்து ரசிகர்கள்.! அஸ்வினுக்கு செம்ம குஷி.. வைரல் வீடியோ.!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இதனையடுத்து இதையடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இதனையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி 89 ரன்கள் எடுத்த வில் யங் 2 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்து வீச்சில் LBW ஆகி வெளியேறினார். ஆனால், டிவி ரீப்ளேயில் அது அவுட் இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரிவ்யூ கேட்கவில்லை. ஒரு வேளை அவர் ரிவ்யூ கேட்டிருந்தால் அவர் அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம். இதனால் போட்டியின் முடிவு மாறியிருக்கலாம். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.