ஐசிசி டெஸ்ட் தவரிசையில் விராட் கோலி, ஸ்மித்தை முந்திய முக்கிய வீரர்.!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் 129 ரன்களையும் 21 ரன்களையும் எடுத்ததால் அவர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
890 புள்ளிகள் பெற்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் வில்லியம்சன். அதே நேரத்தில் ஸ்மித் இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்ஸ் விளையாடி மொத்தம் 10 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். கேப்டன் கோலியும் இந்தியா திரும்பி விட்டதால் வில்லியம்சன் புள்ளிகளில் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார்.
விராட் கோலி 879 புள்ளிகளுபுள்ளிகளுடன் 2ம் இடம் வகிக்கிறார். 4 வது இடத்தில் லபுஷேன் உள்ளார். தொடர்ந்து பாபர் ஆசாம் 5, ரஹானே 6, வார்னர் 7, ஸ்டோக்ஸ் 8, ரூட் 9, புஜாரா 10. என்று இடம் பெற்று உள்ளனர். கடந்த பத்து ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருநாள் வீரருக்கான விருதை விராட் கோலியும், சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஸ்மித்தும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.