நோ பாலிலேயே மிக மோசமான நோ பால்; கவனிக்கத்தவறிய நடுவரால் பலியான கிறிஸ் கெய்ல்.!
world cup 2019 - australia vs west indies - chris gayle out
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. அதில் நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 10வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் (73), கூல்டர் நைல் (92) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 288 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டானது’. எட்டக்கூடிய இலக்கை துரத்திய விண்டீஸ் அணிக்கு கிறிஸ் கெய்ல் (21), லீவிஸ் (1) ஏமாற்றமான துவக்கம் அளித்தனர். ஷாய் ஹோப் (68) அரைசதம் அடித்து அவுட்டானார். பூரன் (40) ஓரளவு கைகொடுத்தார்.
அடுத்து வந்ஹ ரசல் (15), பிராத்வெயிட் (16) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறத்தில் மிரட்டிய கேப்டன் ஹோல்டர் (51) அரைசதம் அடித்து அவுட்டாக, விண்டீஸ் அணி ஆட்டம் கண்டது. பின் வரிசை வீரர்கள் சொதப்ப 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 273 ரன்கள் மட்டும் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் விண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலுக்கு இரண்டு முறை அடுத்ததடுத்த பந்தில் அம்பயர் அவுட் கொடுத்தார். இதை இரண்டு முறையும் கிறிஸ் கெயில் ரிவியூ செய்ய, ரீப்ளேவில் அவுட் இல்லை என தெரிந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் வீசிய போட்டியின் 5வது ஓவரில் 5வது பந்தில் கெயிலுக்கு அம்பயர் எல்பிடபிள்யு முறையில் அவுட் கொடுத்தார். ஆனால் இதற்கு முதல் பந்தை (4வது பந்தை) ஸ்டார்க், மிகப்பெரிய ‘நோ-பாலாக’ வீசினார்.
ஆனால் இதை அம்பயர் கவனிக்க தவறினார். கிரிக்கெட்டில் புதிய விதியின் படி ஒரு பந்தை பவுலர் ‘நோ -பாலாக’ வீசினால், அடுத்த பந்து ஃப்ரி ஹிட்டாக அறிவிக்கப்படும். அதில் பேட்ஸ்மேன் ரன் அவுட் தவிர, வேறு எப்படி அவுட்டானாலும் , அவுட் இல்லை. ஆனால் கிறிஸ் கெயில் பரிதாபமாக வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்விக்கு இந்நிகழ்வு ஒரு முக்கிய காரணம் எனலாம்.
இப்போட்டியில் ஒரு முறை இரு முறை அல்ல, கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் அம்பயர் முடிவு தவறாக அமைந்தது. பல தொழில்நுட்பங்களுடன் நாளுக்கு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டாலும், களத்தில் உள்ள அம்பயரின் தவறு தொடர்ந்து வண்ணம் உள்ளது.