தல தோனியை நேசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்; இலவசமாக டிக்கெட் கொடுத்து அசத்தி வரும் தோனி.!
world cup 2019 - india vs pakistan - dhoni fan pak
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது வரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளை கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியை காண இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்போட்டியை நேரடியாக மைதானம் சென்று காண வெளிநாட்டு ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் டிக்கெட் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் டிக்கெட் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிப்பவர் முகமது பஷீர். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதியதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை தவறாமல் மைதானம் சென்று காணக்கூடியவர். இப்போட்டியில் இருந்தே அவர் காணக்கூடிய இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு தல தோனி இலவசமாக டிக்கெட் எடுத்துக் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டிக்கும் தோனி அவருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து முகமது பஷீர் கூறும்போது: நான் நேற்றே இங்கு வந்துவிட்டேன். சுமார் 6000 கி.மீ., தூரம் வந்துள்ளேன். ஒரு சிலர் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை பார்க்க, 800 முதல் 900 பவுண்டுகள் தர தயாராக உள்ளனர். இது இங்கிருந்து சிகாகோவுக்கு திரும்பி செல்ல ஆகும் செலவாகும். நல்ல வேலையாக எனக்கு டிக்கெட் வாங்க எனக்கு தோனி உதவி செய்தார்.
அவர் பிசியாக இருப்பதால் போனில் அவரோடு தொடர்பு கொள்ள இயலவில்லை. அவ்வப்போது மெசேஜ் அனுப்பி அவருடன் பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். தோனி டிக்கெட் தருவதாக கூறியதாலையே நான் இங்கு வந்தேன். தோனி மனிதநேயம் மிக்கவர், எனக்கு இலவசமாக டிக்கெட் கிடைப்பதை பெரும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதுபோல வேறு யாரும் எனக்கு இப்படி செய்வார்களா என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார்.