உலககோப்பையை தவறவிட்டாலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் சாதனைக்கு குறைவில்லை.!
world cup 2019 - india vs pakistan - match record
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மே 30ஆம் தேதி தொடங்கிய லீக் போட்டிகள் நாளை இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெற உள்ளது.
இந்த இந்த உலகக் கோப்பை வெல்லும் கனவோடு இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது இந்திய அணி. அதனை உறுதிப்படுத்தும் விதமாக லீக் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்த இந்திய அணி மற்ற அனைத்து போட்டிகளையும் வென்று முதலிடத்தை பிடித்தது.
இதனைத் தொடர்ந்து கம்பீரமாக அரையிறுதிக்கு சென்ற இந்திய அணிக்கு நியூசிலாந்து அணி பேரும் சோதனையை ஏற்படுத்திவிட்டது. நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வென்றது என்பதைவிட இந்திய வீரர்கள் சொதப்பியது தான் இந்த தோல்விக்கு பெறும் காரணம் ஆகும்.
இந்நிலையில் உலகக்கோப்பை லீக் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்து, ஸ்கோர்ஷீட்கள், மற்றும் டாஸ் காயின் உள்ளிட்டவை ஆன் லைன் மூலம் ஏலத்தில் விடப்பட்டது. இதில் கடந்த ஜூன் 16ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்திய பந்து அதிகபட்சமாக ரூ. 1,50,000க்கு ஏலம் கேட்கப்பட்டது.
இதே போல அந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட, டாஸ் காயின், ரூ. 1,00,000த்துக்கும், ஸ்கோர்ஷீட் ரூ. 75,000த்துக்கும் ஏலம் கேட்கப்பட்டது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்திய பந்து, 300 அமெரிக்க டாலர்களுக்கும், ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பயன்படுத்திய பந்து, 150 அமெரிக்க டாலர்களுக்கும் ஏலம் கேட்கப்பட்டுள்ளது.