மிக மட்டமான சாதனை படைத்துள்ள இலங்கை; ஆறுதல் வெற்றியாவது பெறுமா தென்னாப்பிரிக்கா.!
world cup 2019 - srilanka - bad record
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 35 வது போட்டியில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இவ்விரண்டு அணிகளும் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு என்பது மிகவும் குறைவுதான்.
ஏனெனில் இலங்கை அணி விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றி அதேபோல் தென்னாப்பிரிக்க விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் இலங்கை அணி 7-வது இடத்திலும் தென்னாப்பிரிக்க அணி 9 ஆவது இடத்திலும் உள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ரபடா வீசிய முதல் பந்திலேயே கருணரத்னே விக்கெட்டை இழந்தார். பின் வந்த குசல் பெரேரா (30), பெர்ணாண்டோ (30), குசல் மெண்டிஸ் (23) ஓரளவு கைகொடுத்தனர்.
அடுத்து வந்த தனஞ்சயா (24), திசாரா பெரேரா (21), உதனா (17) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவு கைகொடுக்கவில்லை. இதையடுத்து இலங்கை அணி 49.3 ஓவரில் 203 ரன்களிக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் மிடில் ஓவர்கள் என கருதப்படும் 11 - 40 ஓவர்களில் மகா மட்டமான ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற சோகமான சாதனை படைத்தது இலங்கை அணி. இந்த ஓவர்களில் வெறும் 96 ரன்கள் மட்டும் சேர்த்த இலங்கை அணி 5 விக்கெட்டையும் பறிகொடுத்தது.
2019 உலகக்கோப்பை தொடரில் 11 - 40 ஓவர்களில் குறைவான ரன்கள் சேர்த்த அணிகள்:
96/5 இலங்கை எதிர்- தென் ஆப்ரிக்கா செஸ்டர் லீ ஸ்டிரீட்
108/2 நியூசி., எதிர்- பாக்., பர்மிங்ஹாம்
110/9 ஆப்கான் எதிர்- நியூசி., டாவுண்டான்
118/6 ஆப்ஜான் எதிர்- வங்கதேசம், சவுத்தாம்டன்
120/4 ஆப்கான் எதிர்- இந்தியா, சவுத்தாம்டன்
இதனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மிக எளிதான இலக்கான 204 ரன்களையாவது எட்டி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.