இங்கிலாந்து வீதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி! கண்கவரும் புகைப்படங்கள்
worldcup final celebrations of fans in london

கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக துவங்கப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற யுத்தத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
1992 ஆம் ஆண்டிற்குப் பிறகு இங்கிலாந்து அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆடுகிறது. அதுவும் தனது சொந்த மண்ணிலேயே ஆட இருப்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் லீக் தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை எளிதில் வென்றதால் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.
இந்த கோலாகலமான இறுதிப்போட்டி இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் மாகாணத்தில் நடைபெறுகிறது. கிரிக்கெட் உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்த இறுதி போட்டி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதலே ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடத் துவங்கிவிட்டனர்.
ரசிகர்களின் இந்த கோலாகல கொண்டாட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.